பயணம்

காலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று
உற்று நோக்கி, உண்மையான உருவத்தை
ஒரு கேள்வி கேட்க
கண் விழித்து
கனவுகளைத் தொலைத்து
தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம்

நிகழ்கால என்னை, கடந்த கால நான்
எதிர் கொண்டு,
பேசத் தயங்கி,
உள்ளம் நடுங்க,
கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன?
"எங்கே என்னைத் தொலைத்தாய்?"

விடை தேடி மீண்டும் தொடங்கும்
ஆத்மார்த்த யாத்திரை
கட்டுங்கடங்காத காலம்
எட்டுத்திக்கிலும் எண்ணம்
தட்டுத்தடுமாறி தொடங்கிய
வாழ்வின் முடிவில் பயணம்

எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி
இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி
அவனும் அப்படித்தான் எனும் சமூக விதிக்குட்பட்டு
வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு
இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்

Comments

Popular posts from this blog

Jamais Vu 2010

In a Lonely Place (1950)

Endhiran (2010)