இனிப்பும் கரிப்பும்

ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றை மட்டுமே படித்துள்ளேன் என்பது மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

வெள்ளவத்தையிலுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று ஜெயகாந்தனின் புத்தகங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று கேட்டேன். பல முழிப்புகள் முகம்மாறிக்கொண்டன. சரி புதுமைப்பித்தன் (அ) அசோகமித்திரன் (அ) ஜெயமோகன் புத்தகங்களாவது உள்ளனவா எனத் தயங்கியபடியே நான் கேட்க, 'என்ன கேள்விப்படாத பெயராச் சொல்லுறார்' என்று எங்கோ இருந்து ஒரு குரல் கேட்டது.


பி.கு. யாழ்ப்பாணத்திலும் தேடி அலைந்து நொந்து நூடுல்ஸாப் போனதுதான் மிச்சம்.

பி.கு.பி.கு. கொழும்பில் சுஜாதா பிரபலமென்றால் யாழிலோ ஓஷோ, சாண்டில்யன் புத்தகங்கள் மட்டும் அடுக்கடுக்காக உள்ளன.

என்ன ஒன்று, கல்கி சுஜாதா வைரமுத்துவின் புத்தகங்களை மட்டும் அள்ளி வந்துவிட்டேன்.

Comments

Popular posts from this blog

In a Lonely Place (1950)

Jamais Vu 2010

Endhiran (2010)