இயலாமை
கண் முன்னே கொடூரங்கள்
அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி
இயலாமை எனும் அரணின் பின் மறைந்து
இரக்கம் ஒரு சொல்லாக
நீதி ஒரு துணுக்காக
மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம்
காலத்தின் போக்கில் வாழ்வைக் கழித்து
அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று
நீதி அளக்கும் தராசில்
ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம்
எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன்
வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று
தொடரும் பல சாபங்கள்
இயலாமைதான் வாழ்க்கையோ?
Comments
Post a Comment