Posts

Showing posts with the label Thamizh

அத்தியாயங்கள்

Image
சில நேரங்களில் எனை மறந்த மனிதரின் முகம் கடந்த உணர்வுகளின் பின் தொடர்ந்த வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது இயற்கை மேல் காதல் கொண்ட இதயம் சுக்கு நூறாக, வெடித்த நிமிடங்களில் எல்லாம் மறைந்த வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது தூக்கத்தின் கனத்தில் கண்கள் மூடி எதுவுமில்லா எண்ணங்களை மொழிபெயர்த்து கண நேரத்தில் உணர்வுகளைக் கோர்க்கும் தருணத்தில் வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது கடந்த காலத்தை அசை போட்டு நிகழ்காலத்தில் மனிதத்தைக் களைந்து எதிர்காலத்தின் மீது அவநம்பிக்கை கொண்ட வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது

மழை

Image
கடந்த கால அசரீரிகள் அழிந்து போன கால் தடங்கள் மறைந்து போன மனப் படிமங்கள் தீக்கிரையான கனவுகள் - நான் என் மழைக்குக் காத்திருக்கிறேன் வெறிச்சோடிய பார்வையில் விரிந்து செல்லும் சமவெளி விரக்தியில் ஓயாத வார்த்தைகளில் வருங்கால அச்சம் கொண்ட சாபங்களில் தொலைந்த வருடங்களை எண்ணி - நான் என் மழைக்குக் காத்திருக்கிறேன் மரங்கள் முணுமுணுக்கும் மாலைப்பொழுதில் அலைகள் ஓய்கின்றன ஆளில்லா கடற்கரைகளில் வானம் விடைபெற்று கண்ணீர் வடிக்கிறது இது என் மழை எனக்கே எனக்கான மழை என் காதல், என் நட்பு மழையின் தாளத்தில் மனம் லயிக்கிறது...

தொடரும் உரையாடல்

மறுபடியும் உயிர்த்தெழுந்து உணர்வுகளின் ஒரு பகுதியில், உறவுகளுடன் ஒரு உரையாடல் கொண்ட கண நேரத்தில் காலன் தவறை உணர பலியான கனவு உண்மை தெளிய, எதுவும் அன்றி பொய்யாக விழிப்பின் விளிம்பில் ஒரு உரையாடல் எவரிடமோ என்பதல்லாமல், பயணங்கள் தெளிவற்று வெளிச்சத்தில் நிலையற்று, இருட்டின் தேடலில் மறந்து போன, மறைக்க நினைத்த வாழ்வின் முடிவில் மரணம்…

பயணம்

காலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று உற்று நோக்கி, உண்மையான உருவத்தை ஒரு கேள்வி கேட்க கண் விழித்து கனவுகளைத் தொலைத்து தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம் நிகழ்கால என்னை, கடந்த கால நான் எதிர் கொண்டு, பேசத் தயங்கி, உள்ளம் நடுங்க, கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன? "எங்கே என்னைத் தொலைத்தாய்?" விடை தேடி மீண்டும் தொடங்கும் ஆத்மார்த்த யாத்திரை கட்டுங்கடங்காத காலம் எட்டுத்திக்கிலும் எண்ணம் தட்டுத்தடுமாறி தொடங்கிய வாழ்வின் முடிவில் பயணம் எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி அவனும் அப்படித்தான் எனும் சமூக விதிக்குட்பட்டு வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்

இயலாமை

கண் முன்னே கொடூரங்கள் அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி இயலாமை எனும் அரணின் பின் மறைந்து இரக்கம் ஒரு சொல்லாக நீதி ஒரு துணுக்காக மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் காலத்தின் போக்கில் வாழ்வைக் கழித்து அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று நீதி அளக்கும் தராசில் ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன் வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று தொடரும் பல சாபங்கள் இயலாமைதான் வாழ்க்கையோ?

Endhiran (2010)

Image
The day was finally set. I was going to watch "Endhiran", the most expensive Indian movie ever made. The "Avatar" of India, the posters claimed. I will admit upfront, I am not a huge fan of either Shankar or Rajinikanth, but there was a glimmer of hope as it was a screenplay by the late Sujatha, a true technocrat whose books and prose I have cherished over the years (would he have coined the term "Robo Sapiens"?). As Sujatha had passed away during the pre-production of the movie, I was well aware that the screenplay would have been completed by Shankar (Madhan Karky is also credited as a co-script writer). The initial reviews had lauded the movie claiming it to be a benchmark in Indian cinema and how Indian cinema has improved by leaps and bounds and how the movie will stand up to any Hollywood production of recent years. The movie proved be a huge disappointment (except a few scenes) and it also proved the fact that without a cohesive screenplay, any movi...

தொலைவுகளில் தொலைந்து போகிறேன்

நண்பர் செந்தீபன் எழுதிய உரையாடலுக்கு ஒரு பின்னூட்டம்... தொலைந்தது எதுவோ தொலைத்தவர் எவ்வழியோ வாழ்க்கையை தொலைக்க முயன்று தொலைந்த நிழல் தோற்றம் உன் மெய் தொலைய உண்மை தொடக்கம் நீ தொலைந்த தோற்றம் தேடி தொடர்ச்சி, தோல்வி அல்ல தொடரும் பயணமே முடிவு

முகமூடி

மனிதனைத் தேடி ஒரு பயணம் அவன் முகமறியாது முகவரி தெரியாது அவன் யார் என யாரும் கேட்டால் பதில் சொல்ல முடியாது... ஒரு முறை கண்ட சுவடு மனதில் குழம்பிய பிம்பமாய் மனிதன் யார்? மாசற்ற மனதுடன் இருப்பானா? மறுபடியும் அவனைக் காண்பேனா? வாழ்க்கைப் பயணத்தில் வழிப்போக்கன் குறுக்கிட்டு மனிதன் முகமூடி அணிந்திருப்பான் என்றான் எதற்காக என்ற கேள்விக்கு விடையில்லை ஒரு வேளை, மனிதன் தன்னை மாற்றிக்கொண்டானோ மற்றவருடன் சேர்ந்து வாழ? தனிமை விரும்பாதவன் தனித்துவம் இழந்துவிட்டான்...

Unnai Pol Oruvan (2009)

Image
Rarely, a Tamil movie had made me sit up straight and gaze in awe at the big screen as the story unfolded. When the actors live the characters and the technical aspects do not stand out, but, rather support the screenplay which moves with such an incredible pace as it happened in UPO, I knew I had witnessed a milestone of a movie in Tamil Cinema. And, if we, the Tamil Cinema audience (who appreciate quality movies) have mainly one man to thank for, it is none other than the one who celebrates his golden year in the film industry as we speak, Mr. Kamal Haasan. This is neither a movie review nor me singing praises on Mr. Haasan, but, rather my thoughts on the movie and a few issues that seem to crop up in some of the reviews for UPO. Kamal as a "Common Man" Some people find it hard to differentiate Kamal Haasan the movie star and Kamal Haasan the versatile actor. If you are a fan or even an avid viewer of Tamil Cinema then you should be prepared to receive whatever he throws at...