அத்தியாயங்கள்

சில நேரங்களில் எனை மறந்த
மனிதரின் முகம் கடந்த
உணர்வுகளின் பின் தொடர்ந்த
வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது

இயற்கை மேல் காதல் கொண்ட
இதயம் சுக்கு நூறாக, வெடித்த
நிமிடங்களில் எல்லாம் மறைந்த
வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது

தூக்கத்தின் கனத்தில் கண்கள் மூடி
எதுவுமில்லா எண்ணங்களை மொழிபெயர்த்து
கண நேரத்தில் உணர்வுகளைக் கோர்க்கும் தருணத்தில்
வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது

கடந்த காலத்தை அசை போட்டு
நிகழ்காலத்தில் மனிதத்தைக் களைந்து
எதிர்காலத்தின் மீது அவநம்பிக்கை கொண்ட
வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவுறுகிறது

Comments

Popular posts from this blog

In a Lonely Place (1950)

Endhiran (2010)

A Touch of Lust