முகமூடி
மனிதனைத் தேடி ஒரு பயணம்
அவன் முகமறியாது
முகவரி தெரியாது
அவன் யார் என யாரும் கேட்டால்
பதில் சொல்ல முடியாது...
ஒரு முறை கண்ட சுவடு
மனதில் குழம்பிய பிம்பமாய்
மனிதன் யார்?
மாசற்ற மனதுடன் இருப்பானா?
மறுபடியும் அவனைக் காண்பேனா?
வாழ்க்கைப் பயணத்தில் வழிப்போக்கன் குறுக்கிட்டு
மனிதன் முகமூடி அணிந்திருப்பான் என்றான் எதற்காக என்ற கேள்விக்கு விடையில்லை
ஒரு வேளை, மனிதன் தன்னை மாற்றிக்கொண்டானோ
மற்றவருடன் சேர்ந்து வாழ?
தனிமை விரும்பாதவன்
தனித்துவம் இழந்துவிட்டான்...
Comments
Post a Comment