மழை
கடந்த கால அசரீரிகள் அழிந்து போன கால் தடங்கள் மறைந்து போன மனப் படிமங்கள் தீக்கிரையான கனவுகள் - நான் என் மழைக்குக் காத்திருக்கிறேன் வெறிச்சோடிய பார்வையில் விரிந்து செல்லும் சமவெளி விரக்தியில் ஓயாத வார்த்தைகளில் வருங்கால அச்சம் கொண்ட சாபங்களில் தொலைந்த வருடங்களை எண்ணி - நான் என் மழைக்குக் காத்திருக்கிறேன் மரங்கள் முணுமுணுக்கும் மாலைப்பொழுதில் அலைகள் ஓய்கின்றன ஆளில்லா கடற்கரைகளில் வானம் விடைபெற்று கண்ணீர் வடிக்கிறது இது என் மழை எனக்கே எனக்கான மழை என் காதல், என் நட்பு மழையின் தாளத்தில் மனம் லயிக்கிறது...